Friday 6 December 2013

Your thoughts create your reality

                   Your thoughts have a processor that the human body responds to. Every thought triggers a reaction to the human mind so that the human mind can respond. Our bodies are like robots when it comes down to how we train our minds to tell the body how it should respond to another thought. We tend to get lost in our thoughts when we start to lose sight of what thought we truly have a desire for. When we start to put negative words to our thoughts, our minds respond in a negative way which will then cause negative feelings to send out to the universe telling the law of attraction what you want.  
                                                                                                                                        You see, we are connected to our mind, so every time you have a thought your body is going to respond whether it is physical or non-physical. Just because you cannot notice your feelings from your thoughts does not mean it does not exist. It's like having a closet full of all your clothes since the day you were born in one place. Even though you do not wear these clothes, they are still there. That is the same thing with your thoughts. This is the reason why it is real important to take notice of what kind of thoughts you have and realize what kind of feelings you are attaching to these thoughts. When you start to break down your thought process you will start to realize every thought has a trigger reaction for your mind to respond to. Without your thoughts your mind would not exist. Your mind would not know what to react to.                                                                 Your thoughts are one of the first steps your mind responds to. Your thoughts are where you have your imaginations. This is one of the most important reasons you need to understand your thought patterns and how they work. Most of our lives we have been told that our thoughts have no control, but this has been a bunch of lies. Our minds are very powerful; with the fake illusion that has been in front our eyes we have lost sight of our true gifts. The law of thought has been hidden in plain view, yet we are not realizing how powerful our thoughts truly are.
                  When you take a step back and start to look at everything around you, I can say all of it has been in your escrow of thoughts with everything that you have been observing over the years whether you realize it or not. Realizing that you have a filter that you can shift through and start to decipher which thoughts are most important, you can now focus on the life you truly want. Most of the time we get so caught up in our everyday life that we get anxiety and from that you will start to encounter negative thoughts of how you have been training your mind to think. From this point on, not knowing you are in control, you tend to let your thoughts wander like a wild animal and this is why you see the average person not achieve his or her dreams. We have been told that we do not have control, that whatever happens, happens. You see, only a small part of that is correct. Everything does happen for a reason but that comes from the soul standpoint to choose the best path for you. It is not up to the world around us to choose for us. This gives our mind boundaries and as humans we are freedom seeking beings. Our minds are meant to have great freedom so we can figure out on our own what these thoughts are that we are having, so we can decide what direction we want to go in life.

By Stanley Dawejko Jr.

Saturday 30 November 2013

When opportunity comes, be prepared to move fast

When opportunity comes, be prepared to move fast... don't hesitate, 
relook, rethink etc. You have waited for a very long time for this 
so when the opportunity comes, be prepared to strike fast.
You may not know when the next opportunity will come.

Watch this video...

It is no different with the Real Life Also .... 

Saturday 16 November 2013

மைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்

கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும் தோட்டங்களும் தொன்மை வாய்ந்த மாளிகைகளும், குளுமையான நிழற் சாலைகளும் இங்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.
மைசூர் புகைப்படங்கள் - மைசூர் அரண்மனை - இருளை துளைக்கும் ஒளிப்பிரவாகம்
Image source: commons.wikimedia
சந்தன மரத்தின் நறுமணமும், ரோஜா மலரின் வாசனையும் இன்ன பிற சுகந்தங்களுடம் எப்போதும் தவழும் மைசூர் நகரத்துக்கு சந்தனமர நகரம் என்ற பெயரும் உண்டு. தந்த நகரம் என்றும் அரண்மனை நகரம் என்றும் கூட இது உள்ளூர் மக்களால் பெருமையுடன் அழைக்கப்படுகிறது. யோகா கலைக்கு பிரபலமான மையமாக திகழும் மைசூர் யோகா நகரம் என்றும் கூட அழைக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் அஷ்டாங்க யோக பயிற்சிகள் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் கூட ஆர்வலர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.

புராணங்களும் ஐதீக கதைகளும்

தேவி பகவ புராணத்தின்படி ஆதி காலத்தில் மைசூர் நகரமானது மகிஷாசுரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும் அவனது பெயரிலேயே மகிஷா – ஊரு என்ற பெயரில் அழைக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பெண் தெய்வமான சாமுண்டி இந்த மகிஷாசுரனை கொன்றழித்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக அந்த ஐதீக புராணம் மேலும் சொல்கிறது. சாமுண்டி தெய்வம் நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சாமுண்டி மலையில் கோயில் கொண்டுள்ளது. அப்படி மகிஷா-ஊரு என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்த நகரம் பின்னாளில் மஹிஷூரு என்று மாறி அது இன்னும் சுருங்கி மைசூரு என்று கன்னடத்தில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் ஆங்கிலேயர் காலத்தில் மைசூர் என்று இறுதிவடிவம் எடுத்துக்கொண்டது.

மைசூர் வரலாற்றிலிருந்து சில துளிகள்

அசோக மாமன்னரின் காலத்தில் மைசூர் புகழ் வாய்ந்த பகுதியாக விளங்கியதற்கு ஆதாரமாக கி.மு 245 ஆண்டிலேயே படைக்கப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. இருப்பினும் மைசூர் பற்றிய வரலாற்றுபூர்வ ஆதாரங்கள் கி.பி 10 நூற்றாண்டிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.
வரலாற்று ஆதாரங்களின் படி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1004 ஆம் ஆண்டு வரை கங்க ராஜ வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. அதன்  பின்னர் நூறு ஆண்டுகளுக்கு சோழ ராஜ வம்சத்தினரின் ஆட்சி தொடர்ந்துள்ளது.
அதற்கடுத்ததாக சாளுக்கிய வம்சத்தினரின் ஆளுகையில் மைசூர் 10 ம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. திரும்பவும் 10 ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த சோழர்கள் 12ம் நூற்றாண்டில் ஹொய்சள வம்சத்தினரிடம் மைசூரை இழந்தனர். ஹொய்சளர்கள் மைசூரில் பல கோயில்களை கட்டியதுடன் மைசூரை இன்னமும் விரிவு படுத்தினர்.
கி.பி 1399 ஆம் ஆண்டிலிருந்து யது ராஜ வம்சத்தினர் விஜய நகர சாம்ராஜ்ய பிரதிநிதிகளாக மைசூரை ஆள ஆரம்பித்தனர். யாதவ வம்சத்தின் வழி வந்தவர்களாக கருதப்பட்ட யது ராஜ வம்சத்தினர்  பின்னர் காலப்போக்கில் உடையார் ராஜ வம்சம் என்று அழைக்கப்பட்டனர். பெட்டடா சாமராஜ உடையார் மைசூர் கோட்டையை புதுப்பித்து அதை தன் தலைமையகமாக வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் 1610 ஆம் ஆன்டு தன் அரசின் தலைநகரத்தை மைசூரிலிருந்து ஷீரங்கபட்டிணத்துக்கு மாற்றினார்.
1761ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூரை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆண்டனர். அதன் பின்னர் மைசூர் திரும்பவும் உடையார்களின் தலைநகரமாக மாறியது. 1895 ஆம் ஆண்டிலிருந்து 1940  வரை நான்காம் கிருஷ்ணராஜ வாடியார் தன் ஒப்பற்ற திட்டங்களின் மூலம் மைசூர் நகரத்தை அழகு மிகுந்த நகரமாக மாற்றினார்.  மைசூர் மாநகரம் அகலமான சாலைகளும், பூங்காங்களும், ஏரிகளும், கம்பீரமான மாளிகைகளும் கொண்ட அழகு நகரமாக இவர் காலத்தில் மாறியது.

மைசூரின் பண்பாட்டியல் அம்சங்கள்

மைசூருக்கு வருகை தரும் வெளியூர் பயணிகள் அனைவரும்  இந்த நகரத்தின் ஒவ்வொரு அம்சங்களிலும்  ஒரு பிரத்யேக பாரம்பரியமும் பண்பாடும் கலையம்சமும் மிளிர்வதை தவறாது உணர முடியும்.
கலை, கைவினைப்பொருட்கள், உணவு, வாழக்கை முறை போன்ற எல்லா அம்சங்களிலும் மைசூரின் ஒரு பிரத்யேக பண்பாட்டு அடையாளம் மிளிர்வதை காணலாம். அதே சமயம் மைசூர் மாநகரம் பல்வகைப்பட்ட மக்கள் வாழும் சர்வதேச வாழ்க்கை சூழலை கொண்டுள்ளது என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயம். பல்வகை பிரதேசங்களைச் சார்ந்த, பல்வகை மொழியை தாய்மொழியாக கொண்ட, பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
மைசூர் மாவட்ட்த்தின் தலைநகரமாக விளங்கும் மைசூர் நகரம் ஒரு சுற்றுலாப் பயணிக்கென்று பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. வரலாற்று பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், தொன்மை வாய்ந்த கோயில்கள், அருங்காட்சியகங்கள், ஏரிகள் மற்றும் தோட்டப் பூங்காக்கள் என பல எண்ணற்ற கவர்ச்சி அம்சங்கள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.
அரண்மனை நகரம் என்று மிக பொருத்தமாக  அழைக்கப்படும் மைசூர் மாநகரத்தில் பல அரண்மனைகள் அமைந்துள்ளன. மைசூர் அரண்மனை அல்லது அம்பா அரண்மனை என்று அழைக்கப்படும் பெரிய அரண்மனையானது இந்தியாவிலேயே அதிகம் சுற்றுலாப் பயணிகளால் தரிசிக்கபடும் நினைவு சின்னமாகும்.
அது தவிர மைசூர் வனவிலங்கு காட்சியகம், சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலேஸ்வரா கோயில், செயிண்ட் ஃபிலோமினா சர்ச், பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன் அரண்மனை ஓவியக்கூடம், லலித் மஹால் அரண்மனை, ஜயலட்சுமி விலாஸ் மாளிகை, ரயில்வே மியூசியம், கரன்ஜி ஏரி மற்றும் குக்கார ஹள்ளி போன்றவை மைசூரின் பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்.
மைசூர் மாநகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகிலுள்ள பல முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர். ஷீரங்கப்பட்டிணம், நஞ்சன்கூடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, தலக்காடு, மெல்கோட்டே, சோமநாதபுரா, ஹலேபேட், பேலூர், பண்டிபூர் தேசிய வனவிலங்கு பூங்கா, சிரவணபெளகொலா மற்றும் கூர்க்(குடகு) போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் மைசூர் மாநகருக்கருகில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
சாகசத்தை விரும்பும் மலை ஏறிகளுக்கு ராம் நகருக்கு அருகிலுள்ள மலைகள் அருமையான வாய்ப்பை தருகின்றன. இந்த இடம் மட்டுமில்லாமல் மைசூருக்கு அருகிலேயே சவண்துர்கா, கப்பல்துர்கா, தும்கூர் , துரஹள்ளி மற்றும் கனகபுரா போன்ற இடங்களிலும் மலை ஏற்றம் மேற்கொள்ள பொருத்தமான சூழல் உள்ளது. படாமி மற்றும் ஹம்பி போன்ற இடங்களில் உள்ள மலைப்பாறை அமைப்புகள் மைசூர் நகரத்துக்கு வருகை தரும் மலை ஏற்ற ஆர்வலர்களை பெரிதும் கவர்கின்றன.
பிலிகிரிரங்கணா மலை, சிக்மகளூர், ஹாஸன் மற்றும் குடகு போன்ற இடங்கள் நடைப்பயணம் மேற்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான இடங்களாக விளங்குகின்றன. மைசூருக்கு வெளியே உள்ள காவேரி ஃபிஷிங் கேம்ப் என்ற இடத்தில்  தூண்டிலில் மீன் பிடித்து மகிழலாம். பறவைகளை கண்டு மகிழ்வதற்கு ஏற்றவாறு நாகர்கோல் ராஜீவ் காந்தி நேஷனல் பார்க், பி.ஆர் ஹில்ஸ் பறவைகள் சரணாலயம் மற்றும் ரங்கணாதிட்டு பறவைகள் சரணாலயம் போன்றவை மைசூரை நகரைச் சுற்றிலும் அமைந்துள்ளன.
மைசூர் நகரம் அங்கு கிடைக்கும் யானைத் தந்தத்தால் ஆன கைவினை பொருட்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அது தவிர அழகான பட்டு துணி வகைகள், சந்தன மரத்தில் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மரத்தால் உருவாக்கப் பட்ட பலவகையான கலைப் பொருட்கள் என்று பல விசேஷப் பொருட்களுக்கு மைசூர் புகழ் பெற்றுள்ளது.
தசரா என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற மைசூர் திருவிழாவானது இங்கு பத்து நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. மைசூர் மக்கள் எல்லோருமே பெருமையுடன் கலந்து கொண்டாடும் இந்த திருவிழா காலத்தின் போது மைசூர் நகரம் விழாக்கோலம் பூண்டு வண்ணமயமாகவும் கோலாகலமாகவும் காட்சியளிக்கும். இக்காலத்தில் மைசூருக்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தம் சொந்த கவலைகள் எல்லாம் மறந்து புத்துணர்ச்சியடைவதை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
கடல் மட்டத்திலிருந்து 770 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் தெற்குப் பகுதியில் காவிரி மற்றும் கபினி ஆறுகளுக்கிடையில் அமைந்திருக்கும் மைசூர் மாநகரம் மிதமான பருவநிலையை யாத்ரீகர்களுக்கு வழங்குகிறது. மாநிலத் தலைநகரான பெங்களூரிலிருந்து 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மைசூர் நகரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மண்டகள்ளி விமான நிலையம் என்று அழைக்கப்படும் மைசூர் விமான நிலையம் ஒரு உள் நாட்டு விமான நிலையமாக இயங்குகிறது. இங்கிருந்து முக்கிய இந்திய நகரங்களுக்கு தினமும் விமான சேவைகள் உள்ளன.
உயிரோட்டமான தெருக்களையும் சிறப்பான வரலாற்று பின்னணியையும் கொண்டுள்ள மைசூர் நகரம் உண்மையிலேயே கர்நாடக மாநிலத்தின் பண்பாட்டு தலை நகரம் என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமான நகரமாகும்.

Sunday 8 September 2013

மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்

 மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்
நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது.



ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள்.நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.


நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்

Friday 6 September 2013

“அனைவருக்கும் குட்மார்னிங்” விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட் (வீடியோ இணைப்பு)

“அனைவருக்கும் குட்மார்னிங்” விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட்(வீடியோ இணைப்பு)

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட ரோபோட், தனது முதல் வார்த்தையை பதிவு செய்தது.
ஜப்பானால் உருவாக்கப்பட்ட கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.
அகன்ற கண்களுடன் பெரிய காதுகளையும் கொண்ட இந்த ரோபோட், விண்வெளியில் இருந்த படியே பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு காலை வணக்கம் தெரிவித்தது.
இந்த ரோபோட்டின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
முதலில் ஜப்பான் மொழியில் பேசத் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைவருக்கும் குட்மார்னிங், நான் தான் கிரோபோ, நான் தான் உலகின் முதல் விண்வெளி ரோபோட் வீரர் என்று தெரிவித்தது.
இதற்கு முன்னதாக நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும் அஞ்சலி செலுத்தியது.
கடந்த மாதம் 4ம் திகதி பூமியை விட்டு கிளம்பிய ரோபோட்டின் உயரம் 34 சென்டிமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
Robo-astronaut Kirobo utters first words in space
A pint-sized android has uttered the first robotic words in space, showcasing Japan's drive to combine cutting-edge technology with cuteness.
The wide-eyed and bootie-wearing "Kirobo" - roughly the size of a chihuahua - broadcast a message from inside the International Space Station, greeting citizens of Earth and paying cheeky tribute to Neil Armstrong.
"On August 21, 2013, a robot took one small step toward a brighter future for all," Kirobo said in a video that showed the humanoid creation drifting weightlessly on-board the ISS, as it moved its legs in the air.
The images made their global debut on Wednesday as part of Tokyo's bid for the 2020 Games during a presentation ahead of a meeting of the International Olympic Committee in Buenos Aires which will decide the host city.
"Good morning to everyone on Earth. This is Kirobo. I am the world's first talking robot astronaut. Nice to meet you," it said in Japanese.
The humanoid was created jointly by advertising firm Dentsu, the University of Tokyo, robot developer Robo Garage and Toyota.
The robot stands just 34 centimetres (13.4 inches) tall and weighs about one kilogram (2.2 pounds).
It left Earth on August 4 on a cargo-carrying rocket that was also delivering supplies to the ISS.
Kirobo is programmed to communicate in Japanese and keep records of its conversations with Koichi Wakata, the first Japanese astronaut to command the ISS.
The robot is part of a study aimed at seeing how a non-human companion can provide emotional support for people isolated over long periods.

Saturday 3 August 2013

Attitude and self confidence


 
























A Businessman was deep in debt and could not see any way out.

Creditors and Suppliers were demanding payments. He sat in the park, deep in thought, wondering if anything could save his company from bankruptcy.

Suddenly an old man appeared before him and asked,
"I can see that something is troubling you seriously".

After listening patiently the old man said,
"I believe I can help you".

He asked the man his name, wrote out a cheque and put it into his hands saying,

"Take this money, meet me here exactly one year from today... and you can pay me back at that time".

Then he turned and disappeared as quickly as he had come.


The businessman saw in his hands a cheque for $ 500,000... signed by Warren Buffet, one of the richest men in the world.

"I can erase my worries instantly" he realized.

But instead, the man decided to put the uncashed cheque in his safe, knowing that it might give him the strength to work out to save his business and to use this only in case of dire emergency.

With changed thinking he negotiated better deals,restructured his business and worked rigorously with full zeal and enthusiasm and got several big deals.

Within few months, he was out of debt and started making money once again.

Exactly one year later he returned to the park with the uncashed cheque.

As agreed, the old man appeared.

But just as the businessman was about to hand him back the cheque and share his success story, a nurse came running up and grabbed the old man.

"I’m so glad I caught him" she cried.

"I hope he hasn’t been bothering you much.

"He always escapes from the mental hospital and tells people that he is Warren Buffet", saying this she took the old man away.

The surprised man just stood there, stunned! All year long he had been dealing thinking that he had half a million dollars behind him...

Its not the money, real or imagined that turns our life around.

It is our Self-confidence that gives us the power to achieve anything & everything that we want.

Sunday 28 July 2013

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...


நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

Saturday 13 July 2013

Discover where the secrets live...This took "Five years"..!!!

"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do." - Bruce Lee.
I've always been enamored by successful people. What interests me most about these legendary people is the story of their success.
The story of how they did itwhy they did it, and what it is in them that keeps them doing it. Along the way, I've certainly come across a few instant success stories. Folks that were in the right place at the right time with the right thing in a BIG way. But it's hardly something you can plan for.

More often, these success legends had something else in common. They discovered where the secrets live. And they used those secrets to achieve great things.
I wanted to be one of those successful people when I got started in business. Sadly, I didn't yet knowwhere the secrets livedand I spent years looking for them in all of the wrong places. I jumped around a LOT looking for those little suckers. A new shiny opportunity would come onto my radar and I'd lock onto it and run like mad. Time would go by, I'd discover something new and I'd go after that.
This continued for years. One trend chasing period after another. Looking back, I realize that all of that "trending" I was doing was really just an excuse to keep myself from having to accept a very simple truth:There Are Few Secrets Worth Knowing That Live on the Surface of Anything 
BUT  The good secrets live in the depths.
They live well below the surface, safely ensconced in the darkness where only a few will ever find them.You have to go deep. That's where the secrets are. That's where they live, because that's where they are safe. I just didn't know that at the time.
And most likely, had someone told me, I would have ignored them because it wasn't what I wanted to hear. I was too hyped up on possibility to be patient enough to find the real secrets. Jumping from trend to trend is a bit like a rock skipping across a calm pond. 

You do that for too long and you'll run out of time -- never having the chance to discover the beautiful landscape and opportunities that exist below the surface of the water.
Below the water is where the secrets live. That's where all of the treasure is hiding. They say that the "cream rises to the top," but it seems more like the really good stuff sinks to the bottom.
Down there it's quiet, with few distractions and very few people.
This is where the legends go -- this is where they discover what they need to succeed. Harvesting secrets is hard work. I can't say it's difficult, but I know it's hard, and here's why:
Harvesting secrets requires an ability to focus on ONE thing for a very long time. In the internet world, it can seem like an eternity. But to get the secrets, you have to develop tunnel vision that allows you to ignore all of the distracting shiny objects and opportunities that are flying by.
You can spend your life chasing those objects. There will always be a new one to chase. And thehigh(nasha) you get from embarking on that journey is thrillingBut there's no payoff, because there's nothing of value there. There is only the roller coaster of hope and expectation of great things to come.

If you've ever ridden on that roller coaster, you know it's a tiring ride. You never quite get the momentum or make the progress you want. You just keep riding.
Today you can make a choice to give that up and start pursuing the stuff that legends are made of. All it takes is a decision to discover where the secrets you need to succeed lie.
Commitment is only something you can show in this very moment. Right now. It is a constant decision you must make. I'd like to say that I planned all of what I'm about to tell you, but the truth is, I didn't.
Through an odd combination of different experiences, mistakes and fate, I woke up one day and made a commitment to find out where my secrets live.
One day I woke up and decided to begin writing daily. The next day, I did the same. And the next and the next. Pretty soon, almost five years flew by. Over that time, I've written a lot of posts. No shiny objects, no fancy strategies. Just simple heartfelt words-- talking to one person at a time. That might sound boring, but I've begun to discover where my secrets live.
I'm beginning to understand what they are and how to harvest them.
This took Five years!
In internet time, that's like 10 decades. Some days I don't feel like renewing my commitment to do the work. But I do it anyway. Because I'm (finally) smart enough to realize that THAT'S the real secret. That's how you begin to dive down into the depths where your secrets live.
That's how you, over time, become a little bit less enamored with the legends who've come before you and progress on the journey to becoming one yourself
- Inspired from the writings of  Jason Leister.

Saturday 11 May 2013

They'll take away your bad karma....let them


Long time ago there was a great king in the Raghukul dynasty (Lord Rama also belonged to the same dynasty). He was suffering from leprosy. He fell on the feet of his master, Guru Vashishtha and said: "Oh Master! So much of suffering... ?"
 
The master kept his hand on his eyes and asked him: "Look far. What do you see?"
"A huge sparkling golden mountain. And another black coal like mountain."
"One is the mountain of your good karma which gave you your kingdom, richness, power & fame. Another is the mountain of your sins because of which you have the painful disease, worries & troubles."
"Master! Is there a way to get relieved of these?"
"Eat up that mountain."
"Oh lord! Eating that mountain is out of my control."
"Then eat up the pile of garbage lying behind your palace."
"Oh great soul! I will not be able to eat that. Please tell me a simple way."
For a few seconds Guru Vashishtha made his mind peaceful and thought of a solution and said: "Sleep in a bed placed near main door of the palace of your widow sister-in-law everyday at 6:00 PM."
The king of Raghukul dynasty... In the palace of widow sister-in-law... ? What will people say? But there was no other solution. The king did as his master told him. Whoever passed by commented on the bad character of the king and humiliated him. People even used abusive language. At ten o' clock in the night the king silently went back to his palace. The next morning he saw that a part of his body was cured. The next day the disease was further cured. In this way his body was getting cured day by day. His mind was also more peaceful now.
On the fourth day Vashishthaji kept his hand over his eyes and asked him to see again. This time he saw that the golden mountain of good karma was as big & sparkling as earlier but the black mountain of sins became very small.
Vashishthaji said: "All those who spoke ill about you & criticized you have taken the portion of your sins. Now they'll have to suffer the consequences of your bad karma. You have become pure."

After two days that black mountain was reduced to a small pebble. The king was totally cured except for a small mark on his face.
"Oh Master!The big mountain has vanished and a small pebble is remaining now. There is a small mark on face now and a little grief in the heart."
"The remaining part is mine. Why should I commit the sin of criticizing & blaming an innocent & pure man and then bear the consequences? You bear the remaining yourself."
Whenever great men have come to earth whether it was Ramkrishna, Ramteerth, Raman Mahrishi, Buddha, Mahavir, Kabir, Guru Nanakdev, Socrates or Christ, their critics were always there. Many of their karmas of past lives (sanchita karma) are destroyed after attaining true knowledge. They are unattached to whatever karma they are doing in this life (kriyaman) so their followers & critics take these karma. They bear with the remaining karma (prarabdha) happily.
They understand that happiness & sadness come and go. How can the material things which come & go disturb my real self? Thus those who have realized true knowledge never lose their balance of mind.
Two men were going somewhere. On the way they became tired. Both of them were troubled by the heat of the sun. thirst & pebbles lying on the road. One man being ignorant is complaining: "Oh My! I'm too tired. I don't know how far we need to walk." Thus these words of his are increasing his pain. The other one knows that there is just one kilometer left. He says: "When we've walked so much then we can easily walk another kilometer. How does it matter?" One is worried and the other is merry.
Similarly those who have realized true knowledge are on the same road of life as we are. We are ignorant and they have discovered the truth.
Do not get lost in your problems or successes. If you apply concentration in your day to day circumstances then even your harsh karmas will melt away by the warmth of knowledge.
If you get the blessings of the self realized saints then your road to salvation will become easy.
- Shared by Dr.Siddharth Aurora.

Friday 19 April 2013

விடியுமென்று விண்ணை நம்பும்போது, முடியுமென்று உன்னை நம்பு!

                   விடியுமென்று விண்ணை நம்பும்போது, முடியுமென்று உன்னை நம்பு!

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !