Friday 19 October 2012

KAVIARAASU KANNADASAN & WORLD GOLDEN WORDS

ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது. -யாலப் தாம்சன்.


தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது. -பங்.


முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது. -தாகூர்.


கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை. -மர்பி.


அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள். -டிரைடன்.


வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும் -பீசீசர்.


நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது. -எலினார் ரூஸ்வெல்ட்.


நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள். - இங்கர்சால்.


மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள். - செர்வாண்டில்.


ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை. - ஜீந்தொஃபோன்தேன்.


ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது. -ஜப்பான்.


பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். -வேல்ஸ்.


தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான். -கொரியா.


உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும். -சீனா.


தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன். -செக்கோஸ்லோவேகியா.


பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது. -டென்மார்க்.


வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது. -துருக்கி.


உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது. - நைஜீரியா.


நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய். - பல்கேரியா.


பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும். - பிரான்ஸ்.


இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது. - பின்லாந்து.


மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது. - பெல்ஜியம்.


இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது. -ருமேனியா.

Sunday 7 October 2012




இவர் பெயர் நாகராஜன்,
கட்லூரை சேர்ந்த இவர்
சிதம்பரதுல MSC., Software
Engineering final year
படிக்கறாரு, இவருடைய
கண்டுபிடிப்பு ஒரு மகத்தான
வெற்றிய தந்துருக்கு.
தவுட்ல
இருந்து எரிவாயு (gas)
கண்டுபிடிச்சிருக்காரு,
இரண்டு பக்கம் அடைக்கப்
பட்ட தகர டப்பாவில்
தவிடு போட்டு மூடி அத
சூடு படுத்தினா, காஸ்
உருவாகி அந்த டப்பால
செட் பன்ன சின்ன குழாய்
மூலமா வெலியெற்ற
படுது,
அதை தீக்குச்சியால்
கொளுத்தியபோது நீல
நிரத்துல எரிந்தது. இந்த
எரிவாயுவை சிலிண்டர்ல
அடைத்து அடுப்பெரிக்க
பயன்படுத்த
முடியும்னு நாகராஜன்
தெரிவித்தாரு.
ஒரு முக்கியமான தகவல்
இந்த புதிய எரிவாயுவ
கண்டுப்பிடிச்ச
நாகராஜன்
ஒரு மாற்றுத்திரனாலி
(ஊனம்முற்றவர்). நம்மலால
முடிஞ்ச ஒரு சின்ன
உதவி like அல்லது share
கொடுப்போம்..
நன்றி : உங்களுக்கு வந்த பதிவு